திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Siva
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (17:47 IST)

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

தனுஷ் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்து இயக்கும் திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் தயாரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கர் தயாரிக்கிறார். இவருடைய திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதோடு, தனுஷும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மற்றும் நயன்தாரா கிட்டத்தட்ட  அருகருகே உட்கார்ந்திருந்தாலும், இருவரும் ஒருவருக்கொருவர் பேசவில்லை என்பதும், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தயாரிப்பாளராக ஆகாஷ் பாஸ்கர் இட்லி கடை மட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 25வது படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் மீது நயன்தாரா சமீபத்தில் பகிரங்கமாக குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், இருவரும் ஒரே திருமணத்தில் கலந்து கொண்டது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva