1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:09 IST)

‘என்னை நம்பி எனக்காக கதை கேட்டார் தனுஷ் சார்’… வைரல் ஆகும் சிவகார்த்திகேயனின் பழைய பேட்டி!

நேற்று நடந்த கொட்டுக்காளி பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் “உங்களுக்கு அடையாளம் கொடுத்ததே நான்தான், உங்களைத் தேடிக் கண்டுபிடித்ததே நான்தான் என்றெல்லாம் யாரிடமும் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னிடம் நான் தான் உனக்கு வாழ்க்கைக் கொடுத்தது என்று சொல்லியே பழக்கப்படுத்தி விட்டனர். அந்த மாதிரி ஆள் நான் இல்லை. நான் நம் நண்பர்களை அறிமுகப்படுத்துவது போல இதை செய்துள்ளேன்” எனப் பேசியிருந்தார்.

அவரின் இந்த பேச்சு தனுஷைக் குத்திக் காட்டுவது போல உள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. சிவகார்த்திகேயனைக் கதாநாயகனாக்கி அவரை வைத்து எதிர் நீச்சல் மற்றும் மான் கராத்தே ஆகிய படங்களைத் தயாரித்து வளர்த்து விட்டவர் தனுஷ். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் பழைய வீடியோ நேர்காணல் ஒன்றில் தனுஷ் பற்றி அவர் பேசியதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். அதில் “நான் 3 படத்தில் நடிக்கும்போது, என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார் தனுஷ் சார். என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு நீங்கள் ஹீரோவாக நடிக்கனும் என்று வெற்றிமாறன் சாருக்கு போன் செய்து அவரின் உதவி இயக்குனர்களிடம் கதையிருக்கா என்று கேட்டு ‘எதிர்நீச்சல்’ கதையை அவரேக் கேட்டு ஓகே செய்தார்.

என்னை நம்பி பணத்தைக் கொடுத்துவிட்டு அவர் இந்தி பட ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டார். படம் முடிந்ததும் பார்த்துவிட்டு என்னை அழைத்து “படம் நல்லா வந்திருக்கு. தைரியமா இருங்க” என்றார்.” என தனுஷை சிலாகித்துப் பேசியுள்ளார்.