திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:55 IST)

எனக்கு வாழ்க்கைக் கொடுத்த சினிமாவுக்கு நான் செய்யும் சிறு உதவி இது –கொட்டுக்காளி குறித்து சிவகார்த்திகேயன்!

‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனான சூரி அதன் பின்னர் நடித்த ‘கருடன்’ திரைப்படம் கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. அதையடுத்து இப்போது ’கொட்டுக்காளி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்று கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தைப் பார்த்துள்ள திரைப் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று படத்தின் டிரைலர் ரிலீஸ் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் “இந்த படத்தின் எடுத்ததன் மூலம் எனக்கு லாபம் வந்தால் அதை எடுத்து முதலில் வினோத்ராஜுக்கு அடுத்த படத்துக்கான முன்பணமாகக் கொடுத்து விடுவேன்.  அதிக லாபம் வந்தால் வினோத் ராஜ் போன்ற இரண்டு இயக்குனர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து விடுவேன். எனக்கு வாழ்க்கைக் கொடுத்த சினிமாவுக்கு என்னால் முடிந்த சிறு உதவிதான்  கொட்டுக்காளி திரைப்படம்” எனக் கூறியுள்ளார்.