வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:17 IST)

எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு.. சூரியின் ‘கொட்டுக்காளி’ டிரைலர்..!

சூரி நடிப்பில் உருவான ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூரி நடித்த விடுதலை மற்றும் கருடன் ஆகிய இரண்டு படங்களும் அதிரடி ஆக்சன் படங்கள் என்ற நிலையில் இந்த படம் முற்றிலும் வேறுபாட்டு முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையம்சம் கொண்டதாகவும் சூரியின் வித்தியாசமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாகவும் அமைந்துள்ளது என்பதை ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

அதிக அளவு வசனங்கள் இல்லாமல் காட்சிகள் மூலம் கதையை புரிய வைக்கும் அளவுக்கு வித்தியாசமாக இயக்குனர் வினோத் ராஜ் இயக்கி உள்ளார் என்பதும் சூரி மற்றும் அன்னா பென் நடிப்பில் உருவாகிய இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva