யார் ஹீரோ? சண்டை போட்டுகொள்ளும் சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா

hero
Last Updated: திங்கள், 27 மே 2019 (10:46 IST)
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடித்த “மிஸ்டர் லோக்கல்” திரைப்படமும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ’இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் சி.கா. பைக் ரேஸராக சிவகார்த்திகேயன் நடிக்கும் அந்த படத்திற்கு ‘ஹீரோ’ என பெயர் வைத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவும் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு அறிமுகம் ஆனவரான விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என பெயர் வைத்திருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. புதிய இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவும் பைக் ரேஸராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவரகொண்டா குழுவும் ‘ஹீரோ’ என்ற தலைப்புக்கு ஏற்கனவே தயாரிப்பாலர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதால் யாருக்கு இந்த தலைப்பு என்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. 
 
யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இரண்டு குழுவுமே தனக்கு இந்த தலைப்புதான் வேண்டும் என்று மல்லுக்கு நிற்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :