வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 மே 2019 (13:49 IST)

ஒருவழியா சிம்புவுக்கு கல்யாணம் கன்பாஃர்ம்! பொண்ணு யார் தெரியுமா?

இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில்  சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசனின் திருமணம் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டதை அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர். 
 
சமீபத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறி  நபீலா அகமது என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அண்ணன் இருக்குபோது தம்பி திருமணம் செய்துகொண்டது பரவலாக பேசப்பட்டது.  இதனால் டி. ராஜேந்திரனும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கவலை தெரிவித்து  சிம்பு திருமணம் குறித்த தகவல் விரையில் தெரிவிப்பேன் "அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்", என கூறினார். இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது. 
 
இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். எனவே கூடிய விரைவில்  சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.