மீண்டும் வருகிறார் தோர் - வெளியானது MIB தமிழ் ட்ரெய்லர்

mib
Last Modified சனி, 25 மே 2019 (19:10 IST)
பூமிக்குள் இருக்கும் ஏலியன்கள் குற்றங்கள் எதுவும் செய்யாமல் தடுக்கும் குற்ற தடுப்பு பிரிவே எம்ஐபி. 1997ல் வெளியான இதன் முதல் பாகம் உலகமெங்கும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் எம்ஐபி ஏஜெண்டாக வரும் வில் ஸ்மித் மற்றும் டோமி லீ ஜோன்ஸுக்கு பெரிய ரசிக பட்டாளமே உருவானது. இதுவரை வெளிவந்த 3 பாகங்களிலுமே இந்த இருவர் கூட்டணிதான் நடித்திருந்தனர்.

இந்நிலையில் புதிதாக வெளியாகவிருக்கும் எம்ஐபி படத்தில் இரு வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களும் ஏற்கனவே ஹாலிவுட் ரசிகர்களுக்கு ரொம்ப பரிச்சயமானவர்கள்தான். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் தோர் கதாப்பாத்திரமாக நடித்த கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் அதே படத்தில் வல்கைரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த டெஸ்ஸா தாம்சன் ஆகிய இருவரும் இதில் நடித்துள்ளனர். எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பு ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தமிழ் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வெகுவாக பரவி வருகிறது. இந்த படம் ஜூன் 14 திரைக்கு வர இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :