செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 10 டிசம்பர் 2025 (17:24 IST)

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?
நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு விளம்பர பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படம், முதலில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் கடனாக பெற்ற ரூ.21.78 கோடி தொகையை திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 
ஏற்கனவே, நிதி பிரச்னைகளால் ஒருமுறை வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கார்த்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த பிரச்னை தீர்க்கப்பட்ட பின்னரே படம் வெளியாகும் என்பதால், டிசம்பர் 12 ஆம் தேதி வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran