பத்து தல கெட்டப்பில் சிம்பு வேற படத்தில் நடித்தது வருத்தம்… இயக்குனர் கிருஷ்ணா பகிர்ந்த சீக்ரெட்
கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது. இப்போது சில பல மாற்றங்களோடு பத்து தல என்ற பெயரோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிம்புவின் சமீபத்தைய படமான வெந்து தணிந்தது காடு க்ளைமேக்ஸில் பத்து தல படத்தின் கெட்டப்பில் நடித்திருந்தார். இது தனக்கு கொஞ்சம் வருத்தமாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும் கௌதம் மேனனும் தன்னுடைய நண்பர்தான் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.