வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (11:08 IST)

விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார்: நடிகர் சரத்குமார்

Sarathkumar
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் பேசிய சரத்குமார் இப்போதைக்கு விஜய்தான் சூப்பர் ஸ்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்றும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் என்று ரசிகர்கள் மத்தியில் நிலவிய கருத்து நிலவி வரும் நிலையில் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என சரத்குமார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் அவர் விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சூரிய வம்சம் படத்தின் 175 ஆவது நாள் விழாவில் நான் சொன்னேன் என்றும் அது தற்போது நடந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்
 
விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று நான் அப்போது சொன்னபோது கலைஞர் கருணாநிதி கூட ஆச்சரியப் பட்டார் என்றும் அவர் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.
 
Edited by Siva