வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:22 IST)

எனக்கு போட்டி எப்பவுமே அவர்தான்!? – வெளிப்படையாக சொன்ன விஜய்!

வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் தனக்கு போட்டி இந்த நடிகர்தான் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘வாரிசு’. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நடிகர் விஜய் “1990ல் இருந்து ஒரு நடிகர் எனக்கு போட்டியாக இருக்கிறார். கொஞ்ச நாளில் அவர் எனக்கு கடுமையான போட்டியாளர் ஆனார். அவருடைய வெற்றியால் நானும் வேகமாக ஓட வேண்டியிருந்தது. அவரவிட அதிகமாக வெற்றி பெற நினைத்தேன். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். அப்படி ஒரு போட்டியாளர் எல்லாருக்கும் தேவை. உங்ககூட நீங்களே போட்டி போடுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், ரத்தத்திற்கு எந்த பிரிவினையும் கிடையாது என்றும், அதனால்தான் ரசிகர்கள் மூலமாக ரத்த தானத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Edit By Prasanth.K