14 வருஷத்துக்கு அப்புறம்.. வாரிசு ஆடியோ வெளியீட்டில் பிரகாஷ் ராஜ் பேச்சு!
விஜய் பிரகாஷ் ராஜ் காம்போ தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹீரோ வில்லன் காம்பினேஷனில் ஒன்று.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கில்லி, போக்கிரி, சிவகாசி மற்றும் வில்லு ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தவை. இதில் பிரகாஷ் ராஜின் வில்லத்தனமான நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. ஆனால் ஏனோ வில்லு படத்துக்கு பின் விஜய் படத்தில் அவர் நடிக்கவில்லை.
இந்நிலையில் 14 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இப்போது வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜ் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ் விஜய்யின் வளர்ச்சியை பார்த்து பிரமிப்பதாக சொல்லியுள்ளார்.
மேலும் “14 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் இணைந்து வாரிசு படத்தில் முதல் ஷாட் நடிக்கும் போது விஜய் என்னிடம் “இந்த கண்ண இவ்ளோ கிட்ட பார்த்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு சொன்னார்” எனப் பேசி கைதட்டல்களைப் பெற்றார். மேலும் இந்த படத்தில் தான்தான் வில்லன் என்றும் கூறியுள்ளார்.