ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!
ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி அபாரமாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து, அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரகானே 56 ரன்களும், சுனில் நரேன் 44 ரன்களும் எடுத்தனர்.
இதை அடுத்து, 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி தொடக்கத்திலேயே தனது அதிரடியை காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமாக விளையாடினர். சால்ட் 56 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து, பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, அந்த அணிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று சென்னை vs மும்பை மற்றும் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva