1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (23:07 IST)

''வாரிசு'' ஆடியோ ரிலீஸில் விஜய் பேச்சு.....வைரலாகும் வீடியோ

vijay
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  இன்று  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
 

இந்த விழாவில் நடிகர் விஜய், சரத்குமார், ராஷ்மிகா, தமன், உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளிட்ட படக் குழிவினர் கலந்து  கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், லோலாக்கு லோலாக்கு என்ற பாடலும், வா தலைவா என்ற பாடல்களும் ரிலீஸானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட   இந்த நிகழ்ச்சியில்  நடிகர் பேசும்போது, நமக்கு எதிராக பிரச்சனைகள் வருகிறது என்றால் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம் என்று கூறினார்.

மேலும், என் ரசிகர்களிடம் நான் நீண்ட நாட்களாக கேட்டுக்கொள்வது ரத்த தானம், ஏனென்றால் இந்த ரத்தத்தில்தான் போட்டியில்லை, மதமில்லை, ஜாதியில்லை என்று குறிப்பிட்டு, எல்லோரும் சமம் என்பதை இதிலிருந்து கற்கலாம் என்று கூறவே அரங்கம் அதிர்ந்தது.

பின்னர், விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

. #VarisuAudioLaunch #Thalapathy