வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 டிசம்பர் 2022 (23:06 IST)

''மீண்டும் பொற்காலத்தை மீட்டு தந்துள்ளார் விஜய்''- தில் ராஜூ புகழாரம்

தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளார்களிடம் அப்போது நிலவிய அந்த பொற்காலத்தை விஜய் மீட்டுத்தந்துள்ளார் என்று தில்ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில்  வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜு, சிவமணி, உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  தயாரிப்பாளர் தில்ராஜூ பேசும்போது,  ஒரு காலத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் தெலுங்குப் படமும் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் தமிழ்ப் படமும் பண்ணுவார்கள். அந்த பொற்காலத்தை விஜய் மீட்டுத்தந்துள்ளார்.

இயக்குனர் வம்சி இந்தக் கதையை 30 நிமிடம் மட்டும்தான் விஜய்யிடம் கூறினார். உடனே அதில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.