சரத்குமார் படம் பெரிய படமாம்… காமெடி பண்ணிய தயாரிப்பாளர்


Cauveri Manickam (Suga)| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (19:17 IST)
சரத்குமார் நடித்துள்ள ‘சென்னையில் ஒருநாள் 2’ படம், படம் எனக்கூறி சிரிப்பு காட்டியுள்ளார் தயாரிப்பாளர்.

 
 
மலையாளத்தில் வெளியான ‘டிராஃபிக்’, தமிழில் ‘சென்னையில் ஒருநாள்’ என ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. 
 
சரத்குமாருடன் சேர்ந்து நெப்போலியன், அஜய், சுஹாசினி, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஜேப்பியார் என்ற புதுமுகம் இயக்கியுள்ள இந்தப் படத்தை, கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் தயாரித்துள்ளார்.
 
செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருந்தது. ஆனால், ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’, விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸாகின்றன. 
 
இதில், ‘மகளிர் மட்டும்’ படம் மட்டுமே 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இதனால், ‘சென்னையில் ஒருநாள் 2’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு அறிக்கை வந்துள்ளது. “ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸாவது வசூலைப் பாதிக்கும் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதற்காக ‘சென்னையில் ஒருநாள் 2’ தள்ளி வைக்கப்படுகிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிகா படத்துடன் சரத்குமார் படத்தையும் பெரிய படம் எனக் கூறியிருப்பது, சிரிப்பை வரவழைக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :