பிரபாஸின் சாஹோ பட சண்டைக் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

Sasikala| Last Modified திங்கள், 11 செப்டம்பர் 2017 (17:45 IST)
‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. இந்தப் படம் தமிழ், இந்தி,  தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

 
இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படம் சுமார்  ரூ.150 ஓடி பட்ஜெட்டில் தயாரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அருண்விஜய் நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.
 
இப்படத்தின் சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் கென்னிபேட்ஸ் தான் அமைக்கிறாராம். மேலும் படத்தில் பிரபாஸுடன் இணைந்து சில அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிகை ஸ்ரத்தா கபூரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்காக மட்டும் படக்குழு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள்  வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :