1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2017 (14:56 IST)

விஜய் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா?

‘விஜய் படத்துக்கு விரைவில் இசையமைப்பேன்’ என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.


 
 
100 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, விஜய்யின் சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். அவர் கடைசியாக இசையமைத்த விஜய் படம் ‘புதிய கீதை’. அதன்பிறகு ஏனோ சரியான வாய்ப்பு அமையவில்லை. 
 
இந்நிலையில், ‘விஜய் படத்துக்கு எதிர்காலத்தில் இசையமைக்கும் எண்ணம் இருக்கிறதா?’ என்று கேட்டால், ‘நிச்சயமாக… நான் தயாராகவே இருக்கிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் யுவன்.