பா.ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது சமுத்திரகனி
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிவரும் ரைட்டர் படத்தில் தனக்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளவர் சமுத்திரகனி. தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.
சசிகுமாரின் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் நடிகராக அறிமுகமான அவரது இயக்கத்தில் உருவாகும் படத்திற்கும் அவரது நடிப்பில் உருவாகும் படத்தில் என்றும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கும்.
இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில், பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ரைட்டர் என்ற படத்தில் சமுத்திரகனி நடித்து வந்தார்.
இந்நிலையில் இப்படம் குறித்து ஒரு முக்கியதகவலை சமுத்திரகனி தனது டுவிட்டர்.
பக்கத்தில் , என் அன்புத்தம்பி பா.ரஞ்சித் தயாரிப்பில்,செல்லத் தம்பி பிராங்கிளின் இயக்கத்தில்,குட்டித்தம்பி பிரதீப் ஒளிப்பதிவில் நான் நடிக்கும் " ரைட்டர்" எனும் திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு பகுதி நிறைவடைந்தது...உடன் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...! வெல்வோம்...!பதிவிட்டுள்ளார்
மேலும், பா, ரஞ்சித் இயக்கத்தில் தற்போது சர்ப்பேட்டா பரம்பரை என்ற படம் உருவாகியுள்ளது. இதில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.