செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (20:14 IST)

ரஜினி பட இயக்குநர் படத்தில் யோகி பாபு... இன்று முதல் ஷூட்டிங்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித் இவரது தயாரிப்பில் யோகி பாபு நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித். இவர் அட்டகத்தில் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்ன மெட்ராஸ் அவரை முன்னணி இயக்குநராக்கியது.

இதையடுத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ஆர்யா நடிப்பில் சர்பாட்டா பரம்பரை படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது.

இந்நிலையில் இவரது தயாரிப்பில் நடிகர் யோகிபாபு ஹீரோவாக  நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பொம்மை நாயகி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாம் இயக்கவுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.#BommaiNayagi