தொடர்புடைய செய்திகள்
- சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!
- ‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’… ஜிம்முக்கு வெளியேக் கோபமான சமந்தா!
- VTV தெலுங்கு வெர்ஷன் ரி ரிலீஸ்… ஒரே மேடையில் சமந்தா & நாக சைதன்யா?
- வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!
- புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?
எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமந்தா டேக் 20 என்ற புதிய பாட்காஸ்ட் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் தான் சந்தித்த உடல் நலப் பிரச்சனைகள் பற்றியும் உடல்நலத்தை பேணுவதைப் பற்றியும் பேசி வருகிறார்.
இப்போது அவர் பேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கும் சிட்டாடல் என்ற தொடரில் நடித்துள்ளார். விரைவில் அந்த தொடர் ரிலீஸாகவுள்ளது. இது தவிர அவர் பாலிவுட்டில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கவர்ச்சியான உடையணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
