வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (07:21 IST)

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!
இந்திய திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை எடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. தோனி, சச்சின் டெண்டுல்க,ர் மேரி கோம் உள்பட பல பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் தற்போது இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக தெரிகிறது. முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர் இயக்க உள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே கனிமொழி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து சாதனை செய்துள்ளதால் இந்த படத்திற்கு இந்த டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சிஎஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் ஆறு பாடல்களை அவர் கம்போஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது