1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (07:36 IST)

சன் டிவிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் பெரிய நிறுவனமான சன் குழுமம் ரஜினி, விஜய்யை அடுத்து தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படத்தையும் கைப்பற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை தயாரித்து வரும் சன் நிறுவனம் விரைவில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65’ படத்தையும் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தையும் சன் டிவி வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைதளங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி தனது டுவிட்டரில் ’இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் குழுமத்தின் சமூக வலைதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்தே இந்த படத்தை சன் டிவி கைப்பற்ற இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது
 
டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.  ’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது