1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (07:35 IST)

அல்லு அர்ஜூன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகியது ஏன்? தமிழர் பிரச்சனை காரணமா?

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி, பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ஒருசில நாட்கள் விஜய்சேதுபதி குறித்த காட்சிகளும் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து திடீரென விஜய்சேதுபதி விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் உறுதிசெய்துள்ளார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக ’புஷ்பா’ படத்தில் இருந்து விலகியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இந்த படம் ஆந்திராவில் தமிழர்கள் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது என்றும், தமிழர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும், இதனால் தான் விஜய்சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது
 
சுகுமார் இயக்கும் ’புஷ்பா’ அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கின்றார் என்பதும், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு பதில் சுதீப் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது