1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (08:04 IST)

நான் ரொம்ப கொடூரமானவன்: ‘மாஸ்டர்’ கேரக்டர் குறித்து விஜய்சேதுபதி

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்தவுடன் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து சமூக வலை தளங்களை பரபரப்பாக்கி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் தனது கேரக்டர் குறித்து கூறியுள்ளார்
 
பொதுவாக வில்லன்கள் என்றால் நல்லவன் கெட்டவன் ஆகிய இரண்டு பண்புகளும் சேர்த்து இருக்கும் என்றும் ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எனது வில்லன் கேரக்டர் முழுக்க முழுக்க கெட்டவன் என்றும், துளி கூட நல்லவன் இல்லை என்றும் மிக கொடூரமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார் 
 
மேலும் இது போன்ற கேரக்டரில் நடிக்க நான் மிகவும் ஆவலுடன் நீண்டகாலம் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அந்த வாய்ப்பு தற்போது ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்சேதுபதியின் மிகக் கொடூரமான வில்லத்தன நடிப்பை திரையில் பார்க்க விஜய்சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.