புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (17:33 IST)

ஒரு மில்லியனை தொட்டார் விஜய்சேதுபதி: குவியும் வாழ்த்துக்கள்

கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்பட அனைத்து நடிகர் நடிகைகளும் டுவிட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் கணக்குகளை தொடங்கி வைத்து இருப்பார்கள் என்றும் அவர்களது கணக்குகளை ஏராளமான ரசிகர்கள் ஃபாலோ செய்வார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டுவிட்டர் பக்கம் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் இன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் 
 
விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கும், ஃபாலோயர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று விஜய் சேதுபதிக்கு சக நடிகர்கள் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது