விஜய்சேதுபதி அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

vijay sethupathi
விஜய்சேதுபதி அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி
Last Modified திங்கள், 6 ஜூலை 2020 (17:50 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுக்கு முன் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். ’96’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார் என்பதும், இந்த படத்தில் நடிகர் பார்த்திபன்
ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூலை 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வரும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில்
இளம் நடிகை மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதில் மேலும் படிக்கவும் :