"ரசிகர்களை குஷிப்படுத்திய ரம்யா"..டிவிட்டரில் வைரலாகும் ரம்யா நம்பீசனின் வீடியோ

Last Updated: சனி, 13 ஜூலை 2019 (14:30 IST)
பிரபல நடிகை ரம்யா நம்பீசன், தனது டிவிட்டர் பக்கத்தில் காலை வணக்கப் பாடல் ஒன்றை அவரே பாடி பகிர்ந்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

”இளைஞன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். கேரளாவைச் சேர்ந்த இவர், நடிகை மட்டுமல்லாது பிண்ணனி பாடகரும் கூட. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தென்னிந்திய மொழிகளில் வெளியான பல திரைப்பாடல்களையும் பாடியுள்ளார்.

இவர் சமீபகாலமாக திரைப்படங்களில் தென்படுவதில்லை. இந்நிலையில் இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் ”குட் மார்னிங்” என்ற தலைப்புடன் ஒரு காலை வணக்க பாடலை, தானே பாடி பகிர்ந்துள்ளார். பல நாட்கள் கழித்து ரம்யா நம்பீசனை பார்த்ததில், அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :