சட்டத்தில் ஓட்டையாம்... சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!! தெறிக்கும் கமெண்ட்ஸ்
வைகோ ராஜ்யசபா எம்பி ஆவதை சட்டத்தில் ஓட்டை என விமர்சித்துள்ள எச்.ராஜாவை டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள்.
2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா? சட்டத்தில் ஓட்டை... என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்ட டிவிட்டர்வாசிகள் பதிலுக்கு எச்.ராஜாவை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில இதோ....