உடன்பிறப்புகளின் விஸ்வாசம் – நெட்டில் உலாவரும் கொத்தடிமைப் பத்திரம் !

Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (14:07 IST)
திமுக இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை இணையத்தில் இருக்கும் உடன்பிறப்புகளை நெட்டிசன்கள் பலமாகக் கலாய்த்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தற்போது முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இதன் மூலம் திமுகவின் அடுத்தத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் என சொல்லாமல் சொல்லிவிட்டது திமுக தலைமை. இந்த நியமனம் அந்தக் கட்சிக்குள் சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்தவில்லை.

இதனால் நேற்று முதல் திமுக மீது இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இணைய உடன்பிறப்புகள் என சொல்லப்படும் இணையத்தில் திமுக பரப்புரை செய்பவர்களைப் பற்றிதான் கேலியான பதிவுகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இன்று உடன்பிறப்புகளைக் கேலி செய்யும் மற்றொரு பதிவு இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


அதில் ‘ கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மூன்றுபுறம் எல்லையாகவும் வங்கக்கடலை ஒருபுறம் எல்லையாகவும் அமையப்பெற்ற தமிழ்நாட்டில் வாழ்கின்ற பெரியாரின் பிள்ளைகள் மற்றும் பேரன்கள், பேத்திகள் ஆகிய நாங்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிக்கொடுத்த கொத்தடிமை பத்திரம் பின்வருமாறு

திமுகவின் ஒருகோடி உறுப்பினர்களாகிய நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பேரன்கள், பேத்திகள் அனைவரும் உங்களுக்கும் உங்களுக்குப் பிறகு ஸ்டாலினுக்கும் அவருக்குப் பிறகு உதயநிதிக்கும் அவருக்குப் பிறகு இன்பா உதயநிதிக்கும் அவருக்குப் பிறகு அவருடையப் பிள்ளைகளுக்கும் கொத்தடிமைகளாக இருந்து சொம்பு அடித்து அசிங்கப்படுவோமேத் தவிர ஒருபோதும் திமுகவில் இருந்து விலகி செல்லமாட்டோம் என்பதை சுயநினைவுடன் எழுதிக்கொடுக்கிறோம்.

இப்போது நீங்கள் கொடுக்கும் பேட்டா 200 ரூ என்பதைக் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்து தொகையை சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டிக்கொள்கிறோம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
இப்படிக்கு
பரம்பரைக் கொத்தடிமைகள்

 இதில் மேலும் படிக்கவும் :