திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (13:26 IST)

ஆண்ட்டி.. ஆர் யு வெர்ஜின்? சின்மயி-யின் பதில் இதுதான்...

டிவிட்டர் வாசி ஒருவர் கேட்ட கேள்விக்கு, பாடகி சின்மயி அளித்த பதிலால் அந்த நபர் கேட்ட கேள்வியையே டெலிட் செய்துவிட்டு ஓடிவிட்டார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். வைரமுத்து இதற்கு மறுப்பு தெரிவித்தார். 
 
இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வந்தனர். ஆனால், சின்மயி பாலியல் புகார் தெரிவித்ததில் இருந்து அவருக்கு தவறான தகாத பல மெசேஜுகள் வந்த வண்ணம்தான் உள்ளது. 
சின்மயி அவற்றில் சிலவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு, அந்த நபர்களை அவமானப்படுத்தியும் உள்ளார். அந்த வகையில் தற்போது டிவிட்டர் பயனர் ஒருவர் சிம்மயியை, ஆர் யு வெர்ஜின் ஆண்ட்டி? என கேட்டுள்ளார். 
 
அதர்கு சின்மயி அங்கில் ஐ அம் மேரீட் என பதில் அளித்துள்ளார். சின்மயி-யின் பதிலை கண்ட அந்த நபர் அவர் போட்ட டிவிட்டை டெலிட் செய்துவிட்டு டிவிட்டர் பக்கத்தில் இருந்து ஓடிவிட்டார். 
 
இதை கண்ட பல டிவிட்டர்வாசிகள் சின்மயின் செயலை பாராட்டியுள்ளனர், சிலர் எதுக்கு இது போன்றவர்களுக்கு பதில் அளிக்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளனர்.