செவ்வாய், 8 ஏப்ரல் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 ஏப்ரல் 2025 (10:28 IST)

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் படுதோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவரின் அடுத்த படமாக ‘குட் பேட் அக்லி’ அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. குறிப்பாக டீசர் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் விடாமுயற்சி தந்த ஏமாற்றத்தை இந்த படம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு முதலில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பிரிமியர் காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகள் நடத்தப்படுவதால் இந்தியாவில் ரிலீஸாவதற்கு ஒரு நாள் முன்னதாக (சில மணிநேரங்கள்) அங்கு ரிலீஸாகவுள்ளது. இதனால் சமூகவலைதளங்கள் மூலமாக விமர்சனம் வெளியாகி இந்திய ரசிகர்கள் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தைக் கெடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது.