திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (17:20 IST)

யாரு என்ன சொன்னா என்ன! ஆரவ் போட்ட ஒற்றை ட்விட்டால் குஷியான ஓவியா!

நடிகை ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு தான் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். ஆனால் தற்போது 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார். 


 
நீண்ட இடைவேளைக்கு 90 Ml படத்தில் நடித்துள்ள ஓவியாவை நெகடீவ் விமர்சனங்களை கொண்டு வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அந்த அளவிற்கு  ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது ,  லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து  அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார். 


 
90 ml படத்தை பார்த்த பெரும்பாலானோர் மோசமான விமர்சனங்களைக்கொண்டு வறுத்தெடுத்து வரும் வேளையில் தற்போது ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த படம் உனது கேரியரில் ஒரு மிகபெரிய படமாக அமையும். இந்த படத்திற்காக நீ போட்ட உழைப்பு என்னவென்று எனக்கு தெரியும். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஓவியா உன்னுடன் எப்போதும் நான் இருப்பேன் என கூறியுள்ளார்