திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:00 IST)

பால், பழத்தை மிஞ்சிய ஓவியாவின் 90ml "தேன்" ஸ்னீக் பீக் 3..!

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள அடல்ட் ஒன்லி திரைப்படமான 90ml  வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. 


 
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு கிடைத்த நற்பெயரால் பல படவாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அவர் செலக்டீவான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 
அந்தவகையில் சமீபத்தில் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகிவரும் அடல்ட் ஒன்லி திரைப்படமான  90 ml படத்திற்கு  சிம்பு இசையமைத்திருக்கிறார்.  இப்படம்  மார்ச் 1-ம்  தேதி (நாளை) வெளியாகவுள்ளது.  
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதிலிருந்த காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்தம் கொண்ட  வசனமாக இருப்பதாகவும் நெட்டிசன்களும், தமிழ் சினிமா ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மரண மட்ட பாடலின் வீடியோ வெளியானபோதும்  பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமின்றி அண்மையில் வெளியான பால் , பழம், என மகா மட்டமான இரண்டு புரோமோ வீடியோக்கள் வெளியாகி  பார்ப்பவர்களை முகம்சுளிக்க வைத்தது.
 
இந்நிலையில் தற்போது இதற்கு முன்பு வெளியான பால், பழம் என்ற இரண்டு ஸ்னீக் பீக் காட்சிகளை மிஞ்சும் விதத்தில் சற்றுமுன் "தேன்" என்ற 3 வது ஸ்னீக் பீக் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்களின் மோசமான கமெண்ட்ஸ்களால் கழுவிஊற்றப்பட்டு வருகிறது.
 
இதோ அந்த வீடியோ லிங்க்: