புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (13:30 IST)

ட்ரைலரை பார்த்திட்டு அரசியலுக்கு அழைத்த கட்சி.! ஓவியா சொன்ன ஷாக்கிங் நியூஸ்.!

கடந்த 2017 ம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு கிடைத்த நற்பெயரால் பல படவாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அவர் செலக்டீவான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


 
அந்தவகையில் சமீபத்தில் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகிவரும் அடல்ட் ஒன்லி திரைப்படமான  90 ml திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை அரசியலுக்கு அழைத்துள்ளனர் பிரபல அரசியல் கட்சி. 
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில்  அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம்  தங்கள் கட்சியின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக பிரபல நடிகர், நடிகைகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. 
 
அந்தவகையில் நடிகை ஓவியாவையும் அரசியலுக்கு அழைத்துள்ளது பிரபல அரசியல் கட்சி. அதைப்பற்றி ஓவியா பேட்டி ஒன்றி கூறியதாவது, 90ML படத்தில் ட்ரைலரை பார்த்துவிட்டு என்மீது பல விமர்சனங்கள் எழுந்தது ஆனால் அதைபற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை.  என்னை பிரபல கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் அரசியலில் சேர்வீர்களா என்கிறார்கள்.

அதுமட்டுமின்றி சிலர் என்னை நேரில் சந்தித்து தங்கள் கட்சியில் சேர அழைப்பும்  விடுத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். என்னை கட்சியில் சேர அழைத்தது யார் என்பதை நான் சொல்லவிரும்பவில்லை. மேலும் கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு செல்வீர்களா என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன் என்றார் ஓவியா. ஆக ஓவியவிடம் யாரோ 1 கோடி பேரம் பேசி அரசியலுக்கு அழைத்துள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது.