இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்: ஓவியா பெருமிதம்
ஓவியா நடித்த '90ml' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இன்று கோயம்பேடு ரோகினி திரையரங்கில் அதிகாலை ஐந்து மணி காட்சியின்போது ரசிகர்கள் முன் நேரில் தோன்றிய ஓவியா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் '90ml' திரைப்படம் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் படம் என்றும், தமிழ் பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் படம் என்றும், குடும்ப பெண்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்றும் பெரும்பாலான விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் இருப்பினும் இன்றைய நவநாகரீக பெண்கள் எடுக்கும் துணிச்சலான முடிவை இந்த படம் வெளிப்படுத்துவதாகவும் ஒருசிலர் இந்த படத்தை ஆதரித்துள்ளனர்
இந்த நிலையில் சற்றுமுன் ஓவியா தனது டுவிட்டரில் 'இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க பெருமைக்குரிய நாள் என்றும், அபிநந்தன் விடுதலையான இந்த நாளை பொதுமக்கள் திருவிழா போல் கொண்டாடி வருவதாகவும், அபிநந்தனின் வீரத்திற்கு ஒரு சல்யூட் என்றும், அவருக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் கடவுளின் ஆசி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஓவியாவின் இந்த டுவீட்டுக்கு 'நல்ல வேளை முதல் வரியை படித்தவுடன் '90ml' ரிலீஸ் ஆன தினத்தைத்தான் வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று ஓவியா கூறுகின்றாரோ என பலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.