1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (17:44 IST)

எங்களுக்குள் இருந்தது முடிந்துவிட்டது - ஆரவ் திருணம் குறித்து பதில்!

பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் பிக்பாஸ் குடும்பமே நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை

ஆரவ்வை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஒருதலையாக காதலித்தார் என்பதும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் போட்டியில் இருந்து திடீரென விலகினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆரவ் திருமணத்தில்பங்கேற்காதது குறித்து ரசிகர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஓவியா,

" ப்ளீஸ் அதை பற்றி கேட்காதீங்க, எங்களுக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது.  அவரது திருமணத்தை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான் என்னால் பங்கேற்கமுடியவில்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.