1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:29 IST)

ஆரவ் திருமணம்: சம்பந்தமில்லாமல் டுவிட் செய்த ஓவியா

பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் பிக்பாஸ் குடும்பமே நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை 
 
ஆரவ்வை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஒருதலையாக காதலித்தார் என்பதும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் போட்டியில் இருந்து திடீரென விலகினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்காவிட்டாலும் டுவிட் மூலமாவது ஓவியா ஆரவ்வுக்கு திருமண வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் இன்று அவர் பதிவு செய்த ஒரு டுவிட் வழக்கம்போல் குழப்பமாக உள்ளது. இன்று ஓவியாவின் டுவீட்டில் இந்த உலகம் மிகவும் ஒரு ஆபத்தான இடமாக மாறும் என்றால் அது கண்டிப்பாக தீயவர்களால் இருக்காது என்றும் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பவர்களால் தான் இந்த உலகம் ஆபத்தானதாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
ஆரவ் திருமணத்திற்கு ஓவியா வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பந்தமே இல்லாமல் ஓவியா ஒரு குழப்பமான கருத்தை பதிவு செய்திருப்பது அவரது ஆர்மியினர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது