செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:32 IST)

கவுதம் மேனன் ஹீரோயினை திருமணம் செய்யவுள்ள பிரபல நடிகர் !

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம்பிடித்து, வெற்றி பெற்றவர் ஆரவ்.

இவர் சினிமாவில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் , ரஜ்பீமா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஏற்கனவே பிக் பாஸ் சீசனில் ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா தெரிவித்தார். ஆனால் இதை ஆரவ் மறுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரவ் மற்றும் ஓவியாவும் நண்பர்களாக மாறினர்.

இந்நிலையில், கவுதம்மேனனின் ஜோஷ்வா, இமைபோல் காக்கா போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்த ராஹேவுக்கும் ஆரவுகும் விரைவில் திருமணம்  நடக்கவுள்ளதாக  தகவல்கள் வெளியாகிறது.