புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:11 IST)

காலில் கொலுசு போடுவது எல்லாம் பழய ஸ்டைல்… ஓவியாவின் வித்தியாசமான ஐடியா!

நடிகை ஓவியா தனது காலில் கொலுசு போல பாம்பு டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியதே வீட்டுக்குள் இருந்த ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரின் காதல்தான். ஆனால் ஒரு கட்டத்தில் ஓவியாவை ஆரவ் விலக்க மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா பாதியிலேயே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் ஓவியாவை பிரபலமாக்கியதே பிக்பாஸ்தான்.


ஆனால் அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார். அதனால் பெரிய அளவில் படங்கள் இல்லாமல் இப்போது சமூகவலைதளங்களே கதியென்று கிடக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் தன் உடலில் புதிதாக வரைந்துள்ள டாட்டூவை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். காலில் கொலுசு போடுவது போல பாம்பு டாட்டூ ஒன்றை புதிதாக அவர் வரைந்துள்ளார்.