வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (16:19 IST)

நடிகையுடன் ஆரவ்வுக்கு திருமணம்… சமூகவலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்!

பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு டைட்டிலை ஜெயித்த ஆரவ்வுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியதே வீட்டுக்குள் இருந்த ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரின் காதல்தான். ஆனால் ஒரு கட்டத்தில் ஓவியாவை ஆரவ் விலக்க மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா பாதியிலேயே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆரவ், இமைபோல் காக்க படத்தில் நடித்து வரும் ராஹி என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். அவரது திருமணத்து பிக்பாஸ் இல்லத்தில் அவரோடு சக போட்டியாளர்களாக இருந்த சிலரும் திரையுலக பிரபலங்களும் வந்து கலந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக சமூகவலைதளங்களிலும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.