செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:14 IST)

மரணமடைந்த ரசிகையின் பெற்றோரை நேரில் சந்திக்க விரும்பிய ஓவியா - கண்ணீர் பதிவு!

பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்தவகையில் ஓவியாவிற்காக ஆர்மி அக்கவுன்ட் நடத்தி வந்த அவரது தீர ரசிகை சாவ்னி என்பவர் மரணித்துள்ளார். இதுகுறித்து ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில்,

RIP சாவ்னி இது நியாயம் இல்ல. இந்த இழப்பை நினைத்து நான் வேதனை அடைகிறேன். அவரது பெற்றோரை எப்படி தொடர்பு கொள்வது என்று யாரேனும் எனக்கு கூறுங்கள். என் ரசிகை  எங்கிருந்தாலும் அமைதியுடன் இருப்பார் என நம்புகிறேன் என ஓவியா மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.