1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (15:53 IST)

பிரியங்கா சோப்ராவிற்கு புது கார் வாங்கிக்கொடுத்த கணவர்: விலை இத்தனை கோடியா!!!

நிக் நோன்ஸ் தனது மனைவி பிரியங்கா சோப்ராவிற்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
36 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட  10 வயது குறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர்  நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமீபத்தில் ஜோத்பூர் அரண்மனையில் வெகுவிமரிசையாக நடந்தது.
 
நிக் அவ்வப்போது மனைவிக்கு காஸ்ட்லி பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் கொடுப்பார். அந்த வகையில் தற்போது பிரியங்கா சோப்ராவிற்கு ஒரு காஸ்ட்லி காரை பரிசாக வழங்கியுள்ளார். ரூ. 2.73 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்650 காரை தான் கிஃப்டாக கொடுத்துள்ளார்.