தன்னை வைத்து குறும்படம் எடுத்த இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்

vm| Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (11:04 IST)
தன்னை வைத்து குறும்படம் எடுத்த இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இது தொடர்பாக பழைய நினைவுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


 
சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
 
இந்த படத்தை தொடர்ந்து தற்போது இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரனின் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இயக்குநர் மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அவர், என்னுடைய அடுத்த படமான 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.


திறமைசாலிகளான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மற்றும் மித்ரன் ஆகியோருடன் இணைவதில் மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன் ஷார்ட் பிலிமில் ஒன்றாக பணிபுரிந்தோம். தற்போது திரைப்படத்துக்காக இணைந்துள்ளோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :