ரூ.14,800 விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: அதிரடி கார்னிவெல் சேல்!

Last Updated: வியாழன், 14 மார்ச் 2019 (14:29 IST)
இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஸ்மார்ட்போன் முதல் வீட்டு உபயோக பொருட்களை வரை இந்த சலுகை நீள்கிறது. 
அந்த வகையில் தற்போது அமேசானில் விவோ கார்னிவெல் துவங்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இந்த கார்னிவெல் சேல் நடைபெறும். கார்னிவெல் சேலில் ஸ்மார்ட்போன்கள் மீது பல சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆம், எக்ஸ்சேஞ்ச் முறையில் விவோ ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.8,000 வரை விலை குரையும். அதேபோல், ஆக்ஸிஸ் வங்கியின் டெபிட் கார்டு / கிரேடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதோடு, வட்டியில்லா கடன் மூலம் ரூ.5,800 சேமிப்பு.
 
ஆக மொத்தம் ரூ.14,800 விலை குறைப்பில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாம். விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.28,990-க்கு விற்கப்படுகிறது. விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.15,990-க்கு விற்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :