ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 31 மே 2019 (19:02 IST)

நல்லா இருக்கா, இல்லயான்னு சொல்ல முடியாத படம் – என்.ஜி.கே. பற்றி ரசிகர்கள் கருத்து !

சூர்யா நடித்து வெளியாகியுள்ள என்.ஜி.கே படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சூர்யா நடிப்பில் ஓராண்டுக்குப் பிறகு என்.ஜி.கே திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியது. பல ஊர்களில் அதிகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது. சூர்யா ரசிகர்கள், செல்வராகவன் ரசிகர்கள் மற்றும் யுவன் ரசிகர்கள அனைவரும் முதல் காட்சி  முடிந்ததும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான இந்தப் படம் சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் காலையில் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டுள்ளது. படம் முடிந்த நிலையில் யாரும் படம் சிறப்பாக இருப்பதாக இன்னும் பதிவு செய்யவில்லை. சிலர் சூர்யாவுக்காக படம் பார்க்கலாம் எனவும் செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்களைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். சிலர் பல இடங்களில் படம் போர் அடித்ததாகவும் அரசியல் பிரசங்க மேடை போல படம் இருந்ததாகவும் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ படம் நல்லா இருக்கா அல்லது இல்லையா என சொல்ல முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எது எப்படியாயினும் சிறப்புக்காட்சியை வைத்து படத்தின் ரிசல்ட்டை சொல்ல முடியாது என்பதால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு பொதுவான சினிமா ரசிகர்கள் பார்த்த பின்னர்தான் தெரியும்.