புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (20:18 IST)

என் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள்! போலீசிடம் மண்டியிட்ட சூர்யா பட நடிகை!

எனது உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என காவல் ஆணையரிடம் நடிகை மீரா மிதுன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

தமிழ் சினிமா ரசிகர்களால் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ள கூடிய அளவிற்கு நடித்து கதாநாயகி அந்தஸ்தை பெற்றவர் நடிகை மீரா மிதுன். இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடிப்பதற்கு முன்பே மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். மேலும் மிஸ் தமிழ்நாடு என்ற நிறுவனத்தில் மண்டல இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் நடிகை மீரா மிதுன், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் அதற்காக பாதுகாப்பு அளிக்கக் கோரியும்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது “மே 3-ம் தேதி மிஸ் தமிழ்நாடு டீவா 2019 என்ற நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தேன். இதனை தடுக்கும் நோக்கத்தில் அஜீத் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன், மலர்கொடி ஆகியோர் எனக்கு எதிராக  செயல்பட்டு வருகிறார்கள். மேலும்  சமூகவலைதளங்களில் என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பி சில காவல்துறை அதிகாரிகளை வைத்தும் மிரட்டி வருகின்றனர்.அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது .
 
அதுமட்டுமின்றி வரும் 3-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்த அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் 14 பெண்களையும் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.