1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Jayam Ravi's Karate Babu Faces Trouble Amid Divorce Proceedings"

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

Jayam Ravi
ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி குறித்த விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நீதிமன்றத்தில் இருந்தாலும், அவர் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக உள்ளார் என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில், அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'கராத்தே பாபு' படத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு படத்திற்கு ரித்தீஷ் தான் பைனான்ஸ்  செய்ததாகவும், ஆனால் தற்போது அவர் அமலாக்கத்துறை சோதனை காரணமாக தலைமறைவாக இருப்பதால், இந்த படம் தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே 'இட்லி கடை', 'பராசக்தி' உள்ளிட்ட படங்கள் தயாரிப்பாளரின் தலைமறைவு காரணமாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், அதில் கராத்தே பாபுவும் தற்போது இணைந்துள்ளது. இது ஜெயம் ரவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இருப்பினும், வேறொரு தயாரிப்பாளரிடம் இந்த படத்தை மாற்றி விடலாமா அல்லது ரித்தீஷ் வெளியே வரும் வரை காத்திருக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த படத்தை ஜெயம் ரவி மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்ததால், கண்டிப்பாக விரைவில் அவர் ஒரு முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?