அடுத்த ஆசியக்கோப்பை பாகிஸ்தானில்! இந்திய அணி பங்கேற்குமா?

Last Modified வியாழன், 30 மே 2019 (23:12 IST)
வரும் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தானுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 2020ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் இருப்பதால் இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி கலந்து கொள்ளாது என்று கூறப்படுகிறது. அதேபோல் இலங்கை அணி கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விளையாட சென்றபோது இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து தாக்கப்பட்டதால் அந்த அணியும் பாகிஸ்தானில் விளையாடுவது கேள்விக்குறியே. எனவே இந்தியா, இலங்கை ஆகிய இரு அணிகளும் கலந்து கொள்ள மறுத்தால் இந்த போட்டி ஷார்ஜாவுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
2020ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடத்த அனுமதிக்கப்பட்டது குறித்து கருத்து கூறிய பிசிசிஐ, 'பாகிஸ்தானில் போய் ஆடுவது என்பது முற்றிலும் இந்திய அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு பிசிசிஐ கட்டுப்படும். நாங்கள் கடந்த முறை யு.ஏ.இ.யில் ஆசியக் கோப்பையை நடத்தியது போல் பாகிஸ்தானும் நடுநிலை மைதானங்களில் ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தானோ எப்படியும் இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்தியே தீருவது என்ற முடிவில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :