ஆங்கிலத்திலும் உருவாகிறதா ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’.. வெளியான தகவல்!
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு டாக்டர் மற்றும் விஜய்யோடு பீஸ்ட் மற்றும் ரஜினியோடு ஜெயிலர் என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. ஜெயிலர் திரைப்படம் பெற்ற இமாலய வெற்றியால் அதன் இரண்டாம் பாகமும் உருவாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸாகும் போது அது ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. உலகளவில் ரசிகர்களைக் கவருவதற்காக இந்த முடிவைப் படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.